Category Archives: வினோத வாழ்க்கை

விநோத வாழ்க்கை [வஜித்தா – ஜேர்மனி]

Standard

http://www.4shared.com/audio/GWwl8CKd/vajitha.html?

Advertisements

விநோத வாழ்க்கை [வேலணையூர் லிங்கா]

Standard


மணலில் விளையாடி
மரத்தின்மேல் ஏறி.
மதில் மேல் பாய்ந்து
மற்றவீடு தாண்டி
சுற்றம் உள்ள உற்றார்
உறவினர்களோடு
நித்தம் திரியும் 
வாழ்க்கை அங்கே!!!

காலையில் வேலை
மாலையில் வேலை
மறுபடியும் இதேவேலை...
குழந்தை முகம் பார்க்க 
நாள் குறிக்கும்
அன்னையர்கள் இங்கே!

கூடி இருந்து குறைகேட்க
குடும்பத்தலைவனுக்கும் நேரம் எங்கே?
விநோதமான வாழ்க்கை இது.
அக்கம் பக்கம் பார்க்கையிலே!
விரும்பி நாம் ஏற்கவில்லை.
வேடிக்கை இன்று நினைக்கையிலே!

கணவன் ஒரு காரில் 
மனைவி மறு காரில்!
பிள்ளை எங்கே என்றால்? 
தொங்கிவரும் மறுகாரில்!
குடும்பத்தில் ஒற்றுமையாம்
தமிழரின் பண்பாடாம்?

ஆண்டவனை தரிசிக்க
ஆலயத்தில் வந்து நிற்பர்!
அரிச்சனை சீட்டுக்களில் 
அவர் பெயரை எழுத 
ஆலயத்தில் மறந்து நிற்பர்!
ஐயர் அவசரத்தில்
அடுத்தவர் பெயர் சொல்லி
அரிச்சனையை முடித்து வைப்பர்!
விநோத வாழ்க்கையிது 
அக்கம் பக்கம் பார்க்கையிலே!!

அருளினி அருள்மொழி
அன்பரசி கலையரசி
தமிழ்செல்வி கலைச்செல்வி!!
தமிழுக்கு அமுதென்று 
பலபெயர்கள் நமக்கிருக்க!
ஆனா என்றும்
மீனா என்றும்
பானா என்றும் 
வீனா என்றும்!
சாத்திரியை நாம் பார்த்து
இராத்திரியில் வைக்கின்றோம்!

இன்பம் இங்கே இல்லை என்று
இங்கிலாந்து சென்றுடுவர்!
இங்கிலீசு நல்லதென்று 
இங்குள்ளவர் உளறுவாதல்!
தங்கி அங்கே இருந்துவிட்டு
தொங்கித்தொங்கி வந்திடுவர்!
தொல்லை வேண்டாம் எமக்கென்று
உள்ளதெல்லாம் போட்டுதென்று!

குழந்தைக்கு பிறந்த நாள்  
குடிபோத்தல்கள் மலர்ந்த நாள்!
கோழிகள் உரிக்கும் நாள்
ஆடுகள் வெட்டும் நாள்!
பலகாரங்கள் பல இருக்கும்
பக்குவமாக செய்திருப்பர்!
வீடியோக்கள் வந்து நிற்கும்
ஓடியோக்களும் வேலை செய்யும்!
குட்டித்தூக்கம் போட்டிருந்த
குழந்தை எழுந்து வந்து!
சுற்றி சுற்றி பார்த்துவிட்டு
தலையில் கைவைத்து 
இவைஎல்லாம் எனக்கெதற்கு??
தம்பிப்பாப்பா எனக்கு வேண்டும்
தொங்கித் தொங்கி அழுது நிற்கும்!!!
விநோத வாழ்க்கை இது 
அக்கம் பக்கம் பார்க்கையிலே!!!!!

வினோத வாழ்க்கை!!! [தயா பிரதீப் – லெபனான்]

Standard


இதுதான் மனித வாழ்க்கை!!!
அன்றாடம் உழைத்து
அலுப்புடனே வீட்டில் -வந்து
ஒருவேளை சாப்பிட்டு
நின்மதியாய் பசி மறந்த
காலமது!!!

உற்றார் உறவினர்களுடன்
சுமை மறந்து சுகமாய் -பேசி
பழகிய பொழுதுகள் அது!!!

இல்லை என்றாலும்
இருப்பதை வைத்து
அன்பு பாசம் கலந்து
ஆதரவாய் இருந்த காலம்
அது !!!

திருமணங்கள்,திருவிழாக்கள்
என்று
சந்தோசமாய் துள்ளித்திரிந்த
நாட்கள் அது!!!
நண்பர்களுடன் ..கவலை
மறந்த ,,பட்டாம் பூச்சியாய்
சிறகடித்த வாழ்க்கை அது!!!

மண் சட்டி பானையில்
சமைத்து..
நோய் நொடி இல்லாமல்
ஆரோக்கியமாக வாழ்ந்த
வாழ்க்கை!!! அது 

சுகயீனம் அற்று நாம்
இருக்கையில்
வயித்திசாலை வாசமே .
இல்லாமல்
நாட்டு வயித்தியம் பார்த்து..
சுகமாய்
வாழ்ந்த வாழ்க்கை அது!!! 

ஆனால் இன்றோ!!!
நாம் வாழும்
வினோத வாழ்க்கை
ஒரு இயந்திர வாழ்க்கையே!!!
எல்லாமே!! பெருமுச்சுடன்
ஒரு நொடி நினைக்கையில்...
என்னடா மானிட வாழ்க்கை இது? 

அன்று அமைதியாய் வாழ்ந்த
வாழ்க்கையில் இருந்த
சந்தோசம்,நிம்மதி 

இன்று கடல் கடந்து வாழும்
வினோத வாழ்க்கையில்
இல்லையே!!!
இறைவா -என்று...

கையேந்தி அழுகின்றேன்...
இன்றைய வினோத வாழ்க்கையை
எண்ணி எண்ணி...

நிறுத்திடுவோம் வினோத வாழ்க்கையை!!! அருளினி சிவநேசன் – பிரித்தானியா

Standard


ஊரெல்லாம் சொந்தங்கள்ஊர் எங்கும் ஆலயங்கள்
ஊர்ந்து வரும் ஊர்வலங்கள்
பார்த்து மகிழ்வோம் களியாட்டங்கள்

யார் கண்ணு பட்டதுவோ
போர் என்று மூண்டதுவே!
யார் கண்ணிலும் படாமல்
பேர் சொல்லி அழைக்க முன்னர்
ஊரை விட்டேஓடி வந்தோம்

ஏர் பூட்டி உழைத்த இனம்
வேர் ஊன்றி நின்ற இனம்
வேர் அறுந்த நிலை அதனில்
பார் எங்கும் இடம் பெயர்ந்தோம்

சீர் கெட்டு போனதெங்கள் தேசமது
கார் இருளில் கதி கலக்கும் கிறீஸ் மனதனது

யார் என்று கண்டுகொள்ள துடிக்கிறது
பார் ஒரு நாள் வெளிவரும் உண்மை அது

வாழ்வா சாவா என்று துடிக்குது நம்ம இனம்
கேள்விக் குறியாய் வளைஞ்சு போச்சு தமிழ் இனம்

தோழ்மீது கை போட்டு
தனை மறந்து ஆடுதிங்கு  நம்மினம்
பாழ் போன தேசமதை......
கட்டி எழுப்ப தோணலையா சீக்கிரம்

தார்மீக கடன்....... அதில் நமக்கும் ஒர் பங்குண்டு
கார்மீது ஏறிச் சென்றி மதி கலங்கி ஏன் நடப்பதுண்டு

ஊரைக் கொஞ்சம் எண்ணத்தில் கொண்டு
நிறுத்திடுவோம் இந்த வினோத வாழ்க்கையை!!!!!!