Category Archives: முத்தம்

முத்தம்… லக்கி

Standard

முத்தம் இதன் அர்த்தம்
அவர் தத்தம் உறவுகளுக்கேற்ப
நித்தம் கொடுத்திடுவார்

அன்பு நெஞ்சங்களாய்
அளவிட முடியாத அன்பின் ஆழத்தை
அள்ளியே வழங்கிடுவார் 
அன்பு முத்தத்தினால்

முந்தி தவமிருந்து
முன்னூறு நாள் சுமந்து
புவிதனில் பிறந்ததும்
உச்சி முகர்ந்து அன்னை
அளித்திடும் அன்பு முத்தம்

ஆசை ஆசையாய் தூக்க வந்த
தந்தையின் கன்னத்தை தன் பிஞ்சு
விரல்களால் அடித்து
வலிக்குதா அப்பா என்று கேட்டு
எச்சில் பட முத்தமிடும் மழலை முத்தம்

கூடப் பிறந்தோரும்
கூடி ஓடி விளையாடுவோரும்
கூட வரும் உறவுகளும்
கொஞ்சி பேசும் குழந்தையிடமும்
கெஞ்சியே வாங்கிடுவார் பாச முத்தம்

பக்கத்தில் இருந்து மட்டுமல்ல
காற்றில் பறந்தும்
கடிதத்தில் புதைந்தும்
தொலைபேசி தொடர்பிலும்
பரிமாறும் ''இச்'' என்று ஒரு முத்தம்

அன்பின் அமுத சுரபியாய்
அனைத்து உயிர்க்கும் பொதுவாய்
அகில உலகமே பரிமாறும்
அன்பின் சின்னம் முத்தம் :*
Advertisements

தொலைபேசி முத்தம்!!! – ராஜன் கட்டார்

Standard

முக்கனியே மாமன்வீட்டு மல்லிகையே
செல்லமாய் மழலைமொழி பேசிடும் 
எம்வீட்டின் குலவிளக்கே

தத்திநடந்து தொத்தி தாவி மாமன் தோளில்
தொங்கி விளையாடுவதாய்
நீண்டநாளாய் நித்திரையில் ஒரே கனவு

சுட்டியாய் பேசி துடிதுடிப்பாய் 
குறும்பு செய்யும் குட்டி அவள்
ஆசைமாமா என்று செல்லமாய் அழைப்பால்
அடுத்தகணமே மாமன் இவன் 
உடல்மெய்சிலிர்த்து நிற்ப்பான்

பாசமாய் கட்டிஅணைத்து 
உச்சி மேர்ந்திட என் மனம் ஏங்குது
தொலை தூரமதில் இருப்பதால் 
உன் குரல் தொலைபேசியில்ஒலிக்குது
அதை அனுதினம் கேட்பதால் 
என் உள்ளம் உவகை அடையுது
செல்லமே,என் சுயாக்குட்டியே
என் தொலைபேசி ஒலிகேட்டு 
மூச்சிரைக்க ஒடி வந்து நீ தரும்
அன்பு முத்தங்கள் என் கன்னங்களை கற்பனையில்
உன் எச்சிலினால் நனைக்குதே
என்குட்டி தேவதையே தொலைபேசியில் 
நீ தரும் அன்புமுத்தங்கள்
மாமன் இவன் கன்னங்களை
நிஜமாய் நனைத்திட 
இறையருள் வேண்டியவனாய் உன் மாமன்!!!

தாய்மை முத்தம் – பாரதி கணேஸ்

Standard

காதலியின் செவ்விதலோடு
சேர்த்தணைத்த முத்தம்
அது முத்தம்மல்ல

மூன்றுமுடுச்சு போட்டு
முந்தானை மூடி கொடுக்கும் முத்தம்
அது முத்தம்மல்ல

அறுபது வயதாகியும்
கணவன் மனைவி கொடுக்கும்
அனுபவமுத்தம்
அது முத்தம்மல்ல

காலைகதிரவனாய் மாலைசந்திரனாய்
அந்திமலையாய் தென்றல்காற்றாய்
மலரின்மனமாய் முழுபவுர்னமியாய்
புதன்கிழமை அதிகாலை 7:18 க்கு அவதரித்த
என் மகளே! மயக்கநிலையும் தாண்டி
பாரதி உன் மகள் என்றவுடன்
கண் விழித்தேன்
ரோஜா இதல் கண்ணங்களை கண்டேன்
கண்களின் ஓரம் ஈரம் தாய்மையை உணர்ந்தநேரம்
உச்சியினை நுகர்ந்து வறண்ட இதழால்
முத்தம் ஒன்று இட்டேன்
சிர்ப்பியில் இருக்கும் முத்து
உதிர்ந்து ஒன்றாய் சேர்வது போல
சுரக்கும் தாய்பாலை
குழந்தை அருந்தும் போது உண்டாகும்
சுகத்திற்கு ஈடானது
இந்த முத்ததிற்க்கு உலகில் உள்ள
மொத்தத்தையும் கொண்டுவந்தாலும் சுத்தமாக ஈடாகாது.

ஒரே முத்தம்!!! – அருளினி.சிவனேசன் (லண்டன்)

Standard

டிங் டொங் மணி ஓசை!!
 
விரைய்ந்து சென்றேன்....கதவைத் 
திறந்து பார்த்தேன்
 
வாசலிலே பாசலுடன்..... நின்றிருந்தார்
 
வாசலிலே நிற்க்கிறீங்க
உள்ளே நீங்க வந்திடுங்க
 
பாசலைத்...... தரத்தான் வந்தேனுங்க!!!
 
வாசலுடன் போனால் எப்பிடியுங்க?
 
ஆட்டோவில்தான் ...... வந்தேனுங்க 
மீட்டருக்கு.......... காசு கேப்பானுங்க
 
மீட்டருக்கு மேல் போட்டுத் தாரேனுங்க
உள்ளே நீங்க வந்திடுங்க
 
ஆட்டோவுக்குள்...... அம்மாவுங்க!!!
சுணங்காமல் வரச் சொன்னாவுங்க
 
பணங்காசு ஒண்ணும் வேணாமுங்க
உங்க வெகுமதியே..... நான் தானுங்க
 
வெறும் மதி்யான என்னை
உங்க திருமதி....... ஆக்கிடுங்க
 
சொக்கிப் போன..... என் அத்தான்                
என் மீது பதி்த்த
அந்த ஒரே முத்தம்.......
 
அதில் சிக்கித்தவித்த....... நான் 
விழித்துக் கொண்டேன்
 
நீண்ட அந்த ....சொப்பனத்தை விட்டு!!!
 

முத்தம்!!! வேலணையூர் லிங்கா!

Standard

ஆதவனின் சத்தமில்லா முத்தத்தில் 
தினம் மலரும் பூ இனங்கள்!!
ஆழ்கடலின் அலைகள் மீது தினம்
முத்தமிட்டுச் செல்லும் மீன் இனங்கள்!!
பசும் புல்மீது காதல் கொள்ளும்
பனித்துளியின் முத்தங்கள்!
வயல் நெல்மீது காதல் கொள்ளும்
மழைத்துளியின் முத்தங்கள்!

நட்சத்திரங்களின் முத்தத்தில்
வெண்ணிலவு தேய்வடையும்!
நடிகைகளின் முத்தத்தில் 
வெண்திரையில் பொன்விளையும்!
சொல் இனிக்கப் பேசுவது
தமிழ் மொழி. தந்த முத்தத்தில்!
பல் இளிக்கப் பேசுவது
பருவப் பெண் தந்த முத்தத்தில்!
கனவில் வருவது! அடைமழையில் 
காதலியின் கன்னத்தில் இட்ட முத்தம்!!
நினைவில் வருவது! அன்று நடந்த 
இளமை இதயங்களின். இனிமை யுத்தம்!
மனசுக்கு இனியது! மழழைகளின் 
சின்னக் கன்னமதில். செல்லமுத்தம்!
மறக்கமுடியாதது! அன்னை 
அவளின்எல்லை இல்லா பாச முத்தம்!

இறைவன் கொடுத்த முத்தமதில்
இயற்கை அழகானது!!
மனிதன் கொடுத்த முத்தமதில் 
இயற்கை பாழானது!!
இசை தரும் முத்தமதில் 
இதயம் தேனாகியது
இளம் வயதில் வந்த முத்தமதில்
வாழ்க்கை வீனாகியது!
வானலையில் வருகின்ற 
வரலாற்று உண்மைகளும் 
வானவில் நிகழ்வுகளும்...
எமக்கு கிடைக்கும் 
அழகான முத்தங்கள்!!
பயனற்ற கருத்துக்களுடன்
பறந்து பறந்து வருகின்ற..சில பறவைகளின்..
சத்தங்கள் எம்மனதில் இடம்பிடிக்கும் 
நீங்கா யுத்தங்கள்!!
கவிக்கொரு கானத்தில்
முத்தம் தந்த அத்தனை கவிகளுக்கும்!!
எனது மொத்தமான முத்தங்களை 
அள்ளி அள்ளி தெளிக்கின்றேன்