Category Archives: முதல் சந்திப்பில்

முதல் சந்திப்பு

Standard


தொலைபேசியில் வலைவீசினாய்
பின் அலை வரிசையில் 
என்னை அழைத்தாய்!!

பாசத்தால் நேசம் வைத்தாய் 
பகல் இரவாய் பேசவைத்தாய்!!
அன்பும் வளர்ந்தது 
ஆசையும் வளர்ந்தது!

பண்புள்ள பெண் என்று 
அன்புடன் வாழ்த்தி நின்றேன்!

காலங்கள் கடந்தன
கனவுகளில் நீ மலர்ந்தாய்
கோலங்கள் நான் போட்டேன்
உன் கொள்ளை அழகைப் பார்பதற்கு!

உண்மைகள் புரிந்த நீயோ
உன் அழகை காட்ட மறுத்தாய்!
பெண்மையின் அழகு 
பேரழகு தான் என்றாய்!

உண்மையாகச் சொல் 
உன் அழகு எது என்றேன்?
கண்திறந்து பார் என்றாள் 
கணனி முன் நில் என்றாள்!
மலர்களின் படம் வைத்து 
தன் பெயரை போட்டிருந்தாள்!
மலர்களை தொட்டுத் தொட்டு 
மயங்கிய நாட்கள் பல!
நேரிலே வந்தால் என்ன 
நிலவென்ன தேய்ந்தா போகும்!
பாடல் ஒன்றை நான் கேட்டேன்
பறந்து நான்வரேன் என்றாய்!

முதல் சந்திப்பு என்பதால்
முகத்தினை மினிக்கினேன்
அகத்தினை செதுக்கினேன்!
அழகுத் தாமரை வந்து நின்றாள்! 

தமிழ் கவிதை சொல்வதற்கு!
கம்பனின் கவிதையை 
கையில் நான் எடுத்துச்சென்றேன்!

பாதங்களின் அழகுபார்க்க 
பூக்களை எடுத்துச்சென்றேன்
முதல் சந்திப்பு என்பதால்
இதயதுடிப்பு ஓங்கி அடித்தது!!

சாலைஓரம் வந்து நின்றாள்
மாலை வணக்கம் முதல் சொன்னாள்!
அண்ணா என்றாள்.
கவிதை எழுதும் கண்ணா என்றாள்!
என்பின்னாலே பாரென்றாள்
மூன்று குழந்தைகள் 
முகங்கள் தெரிந்தன!!
வாழ்த்து மடல் எழுதுவதில்
வள்ளவன் நீங்கள் என்றாள்!!!

முதல் சந்திப்பது முற்றிலும் 
முற்றிலும் கோணலானது!!!
இதயமும் தெறித்தது. 
பூக்களும் புன்னகையை இழந்தன
கம்பனின் கவிதைகள் 
ஏமாந்து போய்விட்டன!!! - வேலணையூர் லிங்கா -
Advertisements

உன்னுடனான என் முதல் சந்திப்பு…!

Standard

முதல் சந்திப்பில் 
முழுமையாய் 
உன்னை அறிந்தேன்.

பின்பு நீ என் 
உறவு என்று தெரிந்தேன்
எழுத்துக்களாலும் 
எண்ணங்களாலும் 
நாம் அறிமுகமானோம்...

சாதரணமாகத்தான் 
பேசிக்கொண்டோம்
ஆனால் ரணமானது 
என் இதயம்..

கவிதைகளால் ஆசைகளை 
பரிமாறிக் கொண்டோம்
உன்னைக் காதலிக்க 
நான் காத்திருக்கவில்லை
ஆனால் நாம் சந்திக்க ஒரு 
பொன்னாள் என் 
வாழ்வில் வந்தது.

உன்னைக் காணும்வரை 
மனதில் ஆயிரம் தவிப்பு
உன்னைக் கண்டதும் 
என்னவன் என்ற பூரிப்பு.

அழகாய் சென்றது 
நம் சந்திப்பு

உன்னுடன் இருந்த 
என் முதல் நிமிடங்கள்
நினைக்க நினைக்க 
மனதில் ஆயிரம் ஆயிரம்
பட்டாம்பூச்சிகள் சிறகடிக்கின்றன

பலவற்றை பேசிக்கொண்டே 
நீ இருக்க
வார்த்தை வசமின்றி 
கேட்டுக்கொண்டே நானிருக்க
அன்றே எனக்கு நீ.. 
உனக்கு நான்
என மனதினால் நாம் இணைந்தோம்..

சில சந்திப்புகள் 
பின்னர் நிகழ்ந்தாலும்
மனதை விட்டு நீங்காது
நினைவினை விட்டு 
அகலாது என்றும் 
தித்திக்கும் தேன்கரும்பு
உன்னுடனான என் முதல் சந்திப்பு..! -லக்கி-

முதல்சந்திப்பில்!!!

Standard


முதல் சந்திப்பில் 
முழுவதுமாய் என் மனதினை 
தொலைத்தவன் நான்... 

உன் கயல்விழிபார்வையாலே
என்னை காந்தமாய் கவர்ந்தவளே...

சத்தங்கள் ஏதும் இன்றி 
என்மனதில் 
உன் நினைவால் 
யுத்தங்கள்செய்பவளே...

உன் அங்க அசைவுகள்கண்டு 
அதிசயத்துநின்றவன் நான்...

தங்கதமிழ்பேசி 
தாரகையாய் நின்றவளே...
ஒரு நொடியில் 
என் உணர்வுகளை 
உன் அழகுவதனம் காட்டி
செயலிழக்கசெய்தவளே...

சுட்டெரிக்கும் வெய்யிலிலும் 
குளிர்மையாய் நின்றவளே...
தெருவோரம் உன்னைக் கண்டதால் 
நடுத்தெருவில் விட்டிடாது...
என்இதயஅறையில் 
பத்திரமாய் வைத்தவன் நான்.
நித்தம் நித்தம் நித்திரையில் 
உன் முதல்சந்திப்பை
புத்தகத்தின் பக்கங்களாய் 
நினைவால் புரட்டுகிறேன்.
உத்தமியை இன்னொரு 
இனிமைதரும் சந்திப்புக்காய்...! - ராஜன் -

முதல் சந்திப்பில்…!

Standard


ஆண்டுகள் தான் பல சென்றாலும் 
உன்னை விட்டு நான் பிரிந்தாலும் 
வற்றாத நதியாக உன் நினைவு 
வானமே எல்லையாக நம் நட்பு 

பருவ வயதினிலே 
பாடசாலை வேளையிலே 
புதிதாய் நீ வந்தாய் 
நான் இருந்த வகுப்பினிலே 

விழி இரண்டும் பதுங்கிடவே
மேனி அது நடுங்கிடவே 
படபடத்த நெஞ்சோடு 
என் அருகில் நீ அமர்ந்தாய் 

உன் பேரைக் கேட்டிடவே 
தயங்கி விட்டு நீ சொன்னாய் 
பார்ப்பதற்கு பரிதாபமாய் 
ஒன்றும் அறியாதவளாய் 
பயத்தோடு நீ இருந்தாய் 

உனக்கு ஆறுதல் சொல்லிவிட்டு 
அறிமுகம் செய்துவிட்டேன் 
நம் வகுப்பின் நண்பிகளை 
நமது முதல் சந்திப்பை நினைக்கையிலே 
இன்றும் எனக்கு வேடிக்கைதான் 
இனம் புரியாத சந்தோஷம் தான் .....
/////////////ராதிகா றேமன்/////////////

சொல்லிடு உன் முதல் சந்திப்பில்!!! உனக்காகவா நான் எனக்காகவா?

Standard

நான் ஒரு கல் போல்....... 
தெரு ஓரமாய் கிடந்தேன்
எனை நீ எடுத்து.......
உன் இதயத்தில் வைத்தாய்

உன் இதயத்தில் நான்....... 
ஒரு ஓரத்தில் இருந்தேன்
என் இதயத்தை திறந்து....... 
அதை நீ சொன்னாய்!

உன் இதயத்தின் சாவி......... 
உன் கையில் என்றாய்
அதன் சாவியை மட்டும் கேளாய்.. 
நீ......... என்றாய்

இருளாய் இருந்த 
என் இதயத்தின்
ஒளி தீபமாய் தினம் 
நீ எரிந்தாய்...!

தூக்கத்திலும் 
நான் விழித்திருந்தேன்
என் பக்கத்தில் 
நீ இருப்பதை 
நான் உணர்ந்தேன்...!

உனைத்தினம் 
எதிர் பார்த்திருந்தேன்
என் உயிரினில் தினம் 
உனைக் கோர்த்து வைத்தேன்

தென்றலாய் உனை 
நான் தேடுகின்றேன்
இசைத் தென்றலாய் 
நீ எனை தாலாட்டிடுவாய்

நீ சிறகுகளானால் 
நான் உன் இறகுகளாவேன்
நீ மனம் திறந்தால் 
உனை நான் ஏற்றுக் கொள்வேன்!

வீசிடும் புயலில் எனை
வெறும் சிறகாக்கி விடாதே!!!!!

உனைத்தேடி தேடி 
கண்கள் வேர்த்து
சிந்தும் கண்ணீரில் 
நான் மூழ்கிடுவேன்

நீ வரும் பாதையில் மலர் தூவி 

நான் காத்து நிற்பேன்!!
விழி இமைக்காமல்.........

உன் இருவிழி பார்வை........ 
ஒரு முறை பார்க்க

காத்தி நிற்பேன் நான் 
நம் முதல் சந்திப்பில்!!!!!! - அருளினி சிவனேசன்