Category Archives: மணல்கோட்டை

மணல் கோட்டை!!!

Standard

மண்ணைத் தொட்ட 
நினைவுகள் 
மண்ணுக்குள் மறைந்தாலும்
உன்னைத் தொட்ட 
நினைவுகள்.. 
மறைவதில்லை ஒரு போதும்!! 

உன் நினைவுகள் வந்து 
என்னிடம் துயரம் தந்து
அது கண்ணீரோடு கலந்து 
நிற்கையில்
துடிக்கின்றேன் உயிரோடு!!! 

உரிமை அது இருந்தும் .. 
உனக்கும் எனக்கும் -உறவே 
இல்லாமல் கலைகிறது .. 
காற்றிலாடும் தீபம் போல !! 

தினமும் !! என் மனது !!
உன் நினைவினில்
சருகாய் கருகுகிறது !

மனம் எனும் கோட்டையில் நீயும் நானும் 
சேர்ந்தே வாழ்ந்தாலும் 
நம் ஆசை தனை மணல் கோட்டையாய் 
ஆக்கிவிட்டதே விதி எனும் ..சதி !! 
 - தயா - லெபனான் -
Advertisements

அழகு தேவதைக்காய் நான் கட்டிய மணல்கோட்டை …

Standard

கல்லாய் இருந்து 
எம்மை கருணையாய் 
காத்தருளும் இறைவா...
காதல் என்றால் உப்பல்லவா
அது தண்னீரில் கரைந்தாலும் 
உயிர் வாழும் அல்லவா

காதல் என்னும் யாகமதை 
மனமதில்தீயாய் வளர்த்து
பாதியிலே தவிக்கவிட்டு 
நிம்மதியை தொலைத்தவர்கள் 
அதிகமல்லவா....

என்மனதில் காதல் செய்தேன்
என்னவளை தினமும் 
நினைவுசெய்தேன்
கட்டழகு மேனியவளை 
கற்பனையில் கனவுசெய்தேன்
கல்லறையிலும் உயிர்வாழும் 
எம்காதல் என்று, 
என்னற்ற ஆசைகொண்டேன்

சொந்தம் நீ என்று 
சொல்லி சொல்லி களைத்துவிட்டேன்
பந்தம் பிடிக்க கூட 
நீ எனக்கு வேண்டாம் என்றவளின் 
ஆணவவார்த்தைகேட்டு
சிதைந்து என் அழகுதேவதைக்காய் 
நான் கட்டிய மணல்கோட்டையது
கடல் அலையால் இல்லை 
உன் சொல்அலையால்!!!

யாழவன்~ராஜன் ~(கட்டார்) 

மணல் கோட்டை!!!

Standard

அதிகாலையில் எழுந்திடுவாய்!
அழகாக உன்னை செதுக்கிடுவாய்!

மிதி வண்டியில் வந்திடுவாய்!
மின்னலாய்த் தான் வந்திடுவாய்!

வகுப்பறையினுள் நுழையமுன்!
வாசலில் என்னை பார்த்து நின்ராய்!

தொகுப்புரைகளும். கருத்துரைகளும்!
சொல்லித்தரும் வாத்தியாரை!
எள் அளவும் பாக்காமல்.
எழில் கொஞ்சும் உன் முகத்தை
என் மனதில் பதிந்திருந்தேன்!

காதலிக்காத ஆணும் இல்லை!
கதலிக்காதவன் ஆணும் இல்லை!

கவலை தாண்டாத காதலும் இல்லை!
கண்ணீர் சிந்தாத காதலும் இல்லை!

உன் விழி பேசும் மொழி பார்த்து!
கவி வரி தேடி நான் செல்வேன்!

நீ வளி வந்த பாதை எல்லாம்!
என் கவி வரிகள் தான் படர்ந்திருக்கும்!

பூக்களின் வாசத்தில்
மலர்ந்திடும் தேசம் போல்!
பெண்னே உன் சிரிப்பில்
மலர்ந்தது என் சுவாசம்!
கண்ணாடி முன் நின்றால்!
உன் முகம் தெரியுதடி!
பின்னாடி வரும் என் நிழலும்
பேதை உன் முகம் போல தெரியுதடி!

உனக்காக மலர்ந்தவள் நான்!
உன்னை மணக்க வருவேன் நான்!

கண்ணை விழி காப்பது போல்
உன்னை நான் காப்பேன் என்ராய்!

அன்று நீ சொன்னதல்லாம்!
அடி நெஞ்சில் கேக்கிதிங்கே!

இன்று அதை நினைத்தால்!
இதயஅறை வெடிக்கிதிங்கே!

விழிகளால் வீசிடுவாய்.
விண் மீனை அங்கழைப்பாய்!

வீன் வார்த்தை பேசாமல்.
விரத வார்த்தை பேசிடுவாய்!

வசந்தமே வா இங்கே !
என் வாழ்வினில் மலர்ந்திவிடு!

மார்கழியில் நாம் இணைவோம்.
மலர்மாலை நாம் அணிவோம்!

மனக்கோட்டை கட்டி விட்டேன்!!
மணல்க் கோட்டை ஆக்கி விடாதே?????

வேலணையூர் லிங்கா...

மணல் கோட்டை

Standard


மந்திரத்தால் மயங்காத என் மனசு 
உன் தந்திரத்தால் மயங்கியதே 
ஆசை வார்த்தை ஆயிரம் தான் பேசி 
என் மௌனம் அதைக் கலைத்தாயே 

கல்லாய் இருந்த என் மனதை 
கரையத்தான் வைத்தாயே 
ஆனந்தமாய் உன் கை பிடிக்க 
காத்துத்தான் இருந்தேனே 

ஆனாலும் வேறொருத்தி கைபிடித்து 
என் கண்ணெதிரே வந்தாயே 
துடித்தேன் உன்னை கண்டு 
தூண்டிலில் அகப்பட்ட மீனாக 

பாவி உன் செயல் பார்த்து 
பரிதவித்து போனேனே 
நான் கட்டி வைத்த காதல் கோட்டை 
மணல் கோட்டையாய் போனதே 

அந்தி மாலைப் பொழுதினிலே 
கடற்கரை ஓரத்திலே 
இன்பமாய் அமர்ந்திருந்து 
அழகாக அமைத்துவிட்ட 
என் மணல் வீட்டை 
அலை கொண்டு போனது போல் 
என் காதல் ஆனதென்ன .....
 
ராதிகா றேமன் .
லெபனான் .

கட்டினாய் மணல்கோட்டை!!!

Standard


துள்ளித்திரிந்த வயதில் 
அள்ளிக் கொட்டினாய் உன் பாசத்தை
 
பள்ளிக்கூட வாசலில் எனக்காகக் 
தினம் காத்து நிற்பாய்
 
தள்ளித் தள்ளி நான் போனாலும்
கண்ணழகி . நீ .... என் மனசை அள்ளிக் கொண்ட
கள்ளி நீ என்பாய்!
 
வெள்ளி நிலவொளியில் எனை நெருங்கி  
வெள்ளி கொலுசை என் கையில் சொருகி

பள்ளி கொண்டாய் என் மனசில் நீதான் என்றாய்!
 
உன் கொலுசை நான் கட்டி அழகு பார்த்து 
பத்திரமாய் பெட்டியிலே பூட்டி வைத்தேன்
என் மண நாளுக்கென
 
கைக் கடிகாரத்தை நான் பார்க்கும் வேளை.. 
உனக்காகத் துடிக்கும் என் கை நாடி!
 
மணிக்கட்டிலேயெ கட்டி வைத்தேன் நீ தந்த பரிசென
என் நாடித்துடிப்பை.......... நீ உணர்வாய் என
 
சிற்றியில் படிக்க வென்று., சிங்கிலாய் பயணம் போன...... நீ
வெற்றியோடு திரும்பி வந்து பங்களா கட்டுவேனென
பந்தா காட்டினாய் ,,,,,,நீ

சிற்றி.. சிற்றியாய் உனை நான் தேடுகின்றேன்..... உன் தாரிணீ
 
லண்டனில் சிற்றிசனோ உனக்கு......
கண்டதும் காதலோ என் உயிரே!!!!!! என்ற உனக்கு!

ஊருக்கு வருவதாக நாலு பேருக்கு
போட்டாய் நீ........ ஈ மெயிலு

உனக்காகக் காத்துக் கிடந்த இந்த மயிலு

தண்டவாளத்தை தாண்டி வந்து 
காத்து நின்றேன் நான் பெட்டியோடு
வந்து இறங்கினாய் நீ......... உன் குட்டியோடு!
 
மாலையோடு காத்து நின்றார்...... உன் வருங்கால மாமனாரு!
என் காலை வாரிவிட்டு...... ஏற்றுக் கொண்டாய் உன் தலை சாய்த்து!

பூஞ்சோலையாய் இருந்த என் மனசில்
புயலாய் வந்து புகுந்தது உன் வரவு
 
பூமாலையோடு உனைச் சேரக் காத்து கிடந்த எனக்கு
மணல் வாரிப் போட்டு......... கட்டினாய் நீ

என் மனசில். ....
 
ஒரு மணல் கோட்டை!!!!
 
அருளினி.சிவனேசன்
(லண்டன்)