Category Archives: பெருமிதம்

பெருமிதம் கொள்கிறேன். – லக்கி

Standard

முழுக் கடலையும் 
ஒற்றைத் துளியாக்கி 
அன்பு என்று எழுதியபோது 
கடலாகிப்போனது உன் அன்பு

பெருமிதம் கொள்கிறேன் 
உன் அன்பின் முன் 
அடிமையாகிப் போவதை நினைத்து

உன்னில் பெருமிதம் கொண்டு
என்னை மறந்து
உலகிடம்  மனதை மறைத்து
உன்னில் காணமல் தொலைந்து 
உன் அன்பில் நனைந்து
அமைதி அடைவதால்

உன்னை
காதல் என்கிறேன் நான் பெருமிதத்துடன்..!
Advertisements

பெருமிதம் [வேலணையூர் லிங்கா]

Standard

மூக்கினில் கயிறு
முதுகெல்லாம் தளும்பு!
கால் எல்லாம் காயம்
கழுத்தில் மட்டும் மணிகள்!
ஒற்றை மாடு அது 
இழுத்து வந்த வண்டிஅது!
முதுகின்மேல் இருந்துகொண்டு 
என் வண்டி இது என்று.
பெருமிதம் அடைந்திடுவான்
ஓட்டி வந்த  மனிதனவன்!

நம் நாட்டு உணவுகளை
நம்பிள்ளைகள் விரும்பிநிற்க!
நாகரீக உணவுகளை 
நாளாந்தம் வாங்கிவந்து!
பாதியில வெந்ததை எல்லாம்
பல் இழித்துக் கொடுத்துவிட்டு!
வேலைக்கு போகிறோம் என்று
பெருவிதம் அடைந்திடுவர்:
நம் நாட்டு அன்னையர்கள்!!

பட்டணத்தில் படித்தபிள்ளை
பட்டம் அது பெற்றதென்று!
வட்டமிட்டு பெண்இடத்தில்
திட்டமிட்டு பெற்றதல்லாம்!
சீர் வரிசை என்று சொல்லி
பெருவிதம் அடைந்திடுவர்!

உற்றார்கள் பெற்றோர்கள்
ஊரில் அங்கே காத்திருக்க!
உலக நடிகையின்
உருவப்படமதை உள்வீட்டில் வைத்துவிட்டு!
விடுமுறைக்கு சென்ற நான்
விரும்பி எடுத்ததென்று!
விருந்தினருக்கு காட்டிக்காட்டி
பெருவிதம் அடைந்திடுவர்!

தமிழ் படிப்போம் நாங்கள்
தமிழ் வளர்ப்போம் நாங்கள்!
தரணி எல்லாம் கூறிவிட்டு
தமிழிழும் பேசிடுவோம்!

கொண்டாட்ட நிகழ்வுகளில்
வண்டாக பறந்து வரும்!!
அழைப்பிதழ்கள் அத்தனையும்
அன்னிய நாட்டுஅவசர மொழியில்!
ஆடம்பரம் இது வென்று பெருவிதம் அடைந்திடுவர்!
உணர்வுகளை நேசிக்கும்
உள்ளங்களை அரவணைக்கும்!
உண்மைகளை பார்த்து 
நாம் பெருமிதம் அடைந்திடுவோம்!

அடைகின்றேன் பெருமிதம்!!! [அருளினி – பிரித்தானியா]

Standard

உன் தேன் சொட்டும் வார்த்தைகளில் 
நான் தேன் குழலாய் சுருண்டு போவேனே

உன் நீண்ட கருங் கூந்தலுக்குள்
புகுந்து விளயாடத் துடித்தேனே
 
என் பேச்சைக் கேக்காமல்
உன் மூச்சை அறியாமல்
 
வெளி நாடு பகட்டு என 
உனைக் கட்டிவைச்ச அப்பனவன்
ஒழியற்ற இருவிழியால்..,
இன்று உனைக் காண  துடித்தவராய்!
மென்று விழுங்கிடுவாய்  நீ மட்டும் உன் துயரை!

ஒத்தையாய் நின்றாலும் உனக்குண்டு.... சக்தி
அத்தை அவள் வைப்பாள் சுமையாய்....... உன்னைச்.... சுத்தி
மெத்தைக்கு செல்லும் வரை

சிந்திடும் வியர்வை உந்தன்........... நெத்தி
அடைய்ந்திடுவாய் உன் முயற்சியில்...... சித்தி

பொறுமைக்கும் ஒர் எல்லையுண்டு..... கேளடி
அவ காட்டுவது ஊருக்கே சீன் அடி
புதுமைப் பெண்ணாய்  நீ.... அவர் வீட்டுக்கொரு தூண் அடி
உன் பெருமை தெரிந்த ஒரே ஜீவன் நான் அடி

சீக்கிரமாய் அறிவேன் அவனைப் பற்றி
வைத்திடுவேன் காவல் உனைச் சுற்றி
உனை மீட்டிடுவேன் உன் கரம் பற்றி
நிச்சயம் உனக்குண்டு பெரும் வெற்றி

பொறுமைக்கே சிகரமான உனை எண்ணி

அடைகின்றேன் நான் பெருமிதம்!!!