Category Archives: பிள்ளைப்பாசம்

பிள்ளைப்பாசம் – திருமதி.ஷக்கீலா ஸ்ரீதர்

Standard

விழுங்கிய சோறு

தொண்டையை அடைத்தது

பிறந்த குழந்தை எச்சம்

என்றவனின் சொல் கேட்டு!!!!!

 

இந்த குறுங்கவிதைகள்,  படித்து சுவைத்தவை

முதல் கவிதை:

கிணற்றில் குழந்தை
தவறி விழுந்த
சேதி கேட்டு
ஓடி வந்தார்கள்,
காடு கழனிகளுக்குச்
சென்றவர்கள்!

பதற்றத்துடன்
பரபரப்புடன்
எல்லோரும் தேடினார்கள்
அவரவர் குழைந்தைகளை.

இரண்டாவது கவிதை:

மெள்ள நகரும்
பேரூந்தின் ஜன்னலில்
அவசரமாய் கையேந்தும்
பிச்சைக்காரியின்
இடுப்புக்குழந்தை
டாட்டா காட்டுகிறது,
பஸ் பயணிகளுக்கு.

மூன்றாவது கவிதை:

உனது தந்தையின் இறப்புச் செய்தி
ஈ-மெயிலில் வருகிறது.
சாப்ட்வேர் சிலந்திவலைப் பின்னலுக்குள்
தகப்பன் நினைவுகளைத் தேடிஎடுத்து
கொடுக்கப்பட்ட சிறு இடைவெளியில்
கொஞ்சமாய் அழுகிறாய்.
உயிர்மீட்க உதவாத உனது டாலர்களோடு
நீ வந்து சேரும்போது
எறிந்த சாம்பல்கூட எஞ்சியிருக்காது.

Advertisements

பிள்ளைப்பாசம் – பாரதி கணேஸ்.

Standard

என் இருபத்தாறு வயது
உடலைத் தூக்கிக்கொண்டு
சிறுபிள்ளைபோல்
துள்ளிக் குதித்தோடி
உன்னைத் தொடர்ந்து வருகிறேன்….

துள்ளி ஓடும் உன்னை
துரத்திச் சோர்கிறேன்…

சின்ன சிறு
கையுயர்த்தி எச்சரிக்கிறாய்…

நான் தொடர்ந்து வருகையில்,
நானே எதிர்பாராத வேளையில்
திடீரெனக் கையிலேந்தி
என்னைக் கொஞ்சுகிறாய்….

மொழியறியா நாய்க்குட்டிபோல்
என்னை சுற்றிச் சுற்றி வருகிராய்….
உன் முத்தங்களின் ஈரத்தில்
சற்றே இளைப்பாரவைக்கிறாய்… .

மாடு “பேவ்…’ எனக் கத்தும் என்கிறாய்,
பூனே…மியா என்கிறாய்,.
இரண்டையும் பார்த்துவிட்டால்
காப்பாக்கு!! பர்த்திம்மா என்கிறாய்….

உனது சொல்லாட்சியில்
தமிழும் தகதகக்கிறது!

இருவரும் குதூகலித்துக் குதித்தபடி,
குளியல் போட்டு
வெளியே வருகையில்,
நான் உனக்கு துவட்ட…
துண்டை இழுத்து நீ
என்னக்கு தூவட்டுவாய்…
அங்கே என்
அன்னை முகம் வந்து போகும்…

உள்ளங்கையில் சோறு பிசங்சு
விரல் நீட்டி, ஒப்புக்கு
நீ ஊட்டி விடும்,
உன் கிரிசி பொம்மை,
அயர்ந்து உறங்கி விடும்…
ஆனால் உன்கண்கள்
தூங்குவது இல்லை…

உன்னை நான்
தூங்க வைப்பதுபோல்
பொம்மையை
நீ தூங்க வைக்கையில்,
தாயின் பிள்ளை பாசம்,
அங்கே தோற்று போய்நிர்க்கிறது….

உன் விம்மல் தாலாட்டில்
நம் வீட்டு ஊஞ்சல் கூட
அயர்ந்து தூங்கிப் போய்கிறது.. !

இரவு தூக்கத்தில்
பதறி அழுவாய்..
பயந்து பார்ப்பேன்
பிறகு சிரிப்பாய்
பாட்டி சொன்ன கதை
நினைவுக்குவரும்
கனவில் நரி அம்மாவைத்
தூக்கிச்சென்றால் அழும்,
அப்பாவைத் தூக்கிச் சென்றால்
சிரிக்கும் என்று…

தங்கமே உன்
அருகில் தான் இருக்கிறேன்
உன் பிள்ளை பாசத்தில்
தாய்பாசதையும் வென்றுவிட்டாய் .
என் வாழ்க்கையில்
பெரும் புதிர் நீ
என் வானுக்கும்
நிலத்தக்குமான உன்
சிறிய சிறகசைவில்தான்
அவிழ்ந்துகொண்டிருக்கிறது

மீதமிருக்கும் என் நாட்களுக்கான
ஆதாரமே நீ தான
உன் சிறு வார்த்தையில்
ஓர் ஒற்றைச் சொல்லில்கூட
நான் பாதுகாப்பாக நினைக்கிறன்

பேசிக்கொண்டே இரு
கேட்டுக்கொண்டே இருக்கிறேன்
உன் பேச்சுகள் தீர்ந்தெஞ்சும்
மௌனம் போதும் என் செல்லமே..
உன் ஒளிரும் கண்களில்
அன்னை முகம் காண்கிறேன்
இதுதான் பிள்ளை பாசமோ…!