Category Archives: பரிசு

பரிசு – லக்கி

Standard

என் மேல் விழுந்த சிறு மழைத்துளியை
உனக்காய் நான் தந்த போது
அதை சிப்பியின் வயிற்றில் புகுத்தி
வெண்முத்தாய் எனக்கு பரிசளித்தாய்

என் மூச்சுக்காற்றை உனக்காய்
நான் தந்த போது
அதை புல்லாங்குழலில் கொடுத்து
அழகிய இசையாய் பரிசளித்தாய்

என் பாதம் தீண்டிய கல்லெடுத்து நான் 
தருகையில் அழகிய சிற்பமொன்றை
எனக்கு பரிசளித்தாய்

என் கண்ணின் வெண்ணிறம் எடுத்து
நான் உனக்கு கொடுக்கையில்
அதிலிருந்த அழகிய பல வண்ணங்கள் தொட்டு
வானவிலொன்றை எனக்கு பரிசளித்தாய்

உன் பார்வைகளை பரிசளித்தாய்
உன் புன்னகையை பரிசளித்தாய்
உன் உள்ளத்தை பரிசளித்தாய் 

இப்போது கூட, நான் என் சிறு இதயத்தை
உனக்கே உனக்காய் பரிசளிக்கிறேன்
பதிலுக்கு நீ, உன் காதலை 
எனக்கே எனக்காய் பரிசளிப்பாயா?

பரிசு [லிங்கா – ஜேர்மனி]

Standard


அன்னையின் அரவணைப்பில்
அன்பால் வளர்ந்த அவள்.
ஆசைக் கணவனுடன்
கூடிவாழ்ந்த வாழ்க்கையில்.
குழந்தை ஒன்று
பெற்றெடுத்தால் கிடைத்துவிடும்.
அன்னை என்னும் முதல் பரிசு!!!

கல்வியினை நாம்கற்று
கற்றோரை நாம்மதித்து.
நாம் பெற்ற பட்டமதை
பெற்றோர்  முன் வைக்கையிலே.
ஆனந்தக் கண்ணீரின்
ஆனந்தப் பரிசு ஒன்று. 
நம்முன்னே காத்துநிற்கும்!!

இருட்டுப்பென் ஆனாலும்
குறுட்டுப்பென் ஆனாலும்
இதமாக அவள் மனசை 
இன்பமூட்ட வைத்திருக்கும்
அழகான கவிகளுக்கு
உயிர்கொடுக்கும்
தாய் மொழி தந்த
தமிழ் மொழி என்னும் பரிசு!!

பூமியை அவன் படைக்க
பொல்லாத வேலைகளை.
மனித சாமி வைத்து செய்வதனால்
மரணம் தான் பரிசு என்று
மறைமுகமாய். சொல்லி வைத்தான்!!!
கருணைமனு கேட்டுவந்தால்
கொடுக்கமாட்டேன் நான் என்று.
உறுமுகின்ற மாமிக்கும்
இது போன்ற பரிசுகள் தான்.
என்நாளும் தொடர்ந்து வரும்!!

நம் இனிய வானொலிக்கு 
கவிக்குயில் பல வந்து.
கருத்துமிக்க கவிதைகள்
வான் அலையில்  தருவதால்
காதினிக்க பரிசு ஒன்று
காற்றோடு கலந்து வரும்!!!