Category Archives: நன்றி

நன்றிக்கடன் [வேலணையூர் லிங்கா]

Standard


பூமிக்கு நன்றிக்கடன் 
படர்ந்திருக்கும்
பனிமலர்களின் முத்தங்கள்!

பூக்களுக்கு நன்றிக்கடன்
பறந்து வரும் வண்டினத்தின் சத்தங்கள்!

வானத்திற்கு நன்றிக்கடன்
வளைந்திருக்கும் வானவில்லின் ஐலங்கள்!
வார்த்தைக்கு நன்றிக்கடன்
இசையில் வரும் தமிழ்மொழி கீதங்கள்!

காதலுக்கு நன்றிக்கடன்
காதலியின் நினைவுகளில் வரும் கனவுகள்!
காதலிக்கு நன்றிக்கடன்
கழுத்தில் கட்டும் 
தங்க முடிச்சுக்களின் வளைவுகள்!
பாடிவரும் தென்றலுக்கு நன்றிக்கடன்
தென்னங்கீற்றின் ஓசைகள்!
ஓடிவரும் கடல் அலைக்கி நன்றிக்கடன்
கரையோரத்தில் கன்னியரின் பாதங்கள்!

சூரியனுக்கு நன்றிக்கடன்
பொங்கிமகிழும் தைப்பொங்கள்!
சுற்றிவரும் நிலவுக்கு நன்றிக்கடன்
காதலிக்கு வரையும் கவிதைகள்!
அன்னைக்கு நன்றிக்கடன் 
அவள் கானும் கனவுகளின் நினைவுகள்!
அகில உலகுக்கு நன்றிக்கடன்
நாம் பேசும் உண்மைகள்!

நன்றிக் கடன்!!! [அருளினி – பிரித்தானியா]

Standard


இம்மண்ணில் என்னைப்
பெண்ணாகப் படைத்த
இறைவனுக்கு முதல் நன்றி!

இரு கண்ணிலே பார்வையை வைத்த
அவனுக்கு.........இன்னொரு நன்றி!

உயிர்னங்களுக்கெல்லாம் ஆதரவான
ஆதவனுக்கு நன்றி!

சேற்றில் இறங்கி ஏர்பிடித்து
வியர்வை சிந்தும்
உழவனுக்கு நன்றி!

கடைக்குட்டியாய் இருந்து வீட்டையே
இரண்டாக பிரட்டி எடுத்த என்னை
தடை போடாமல் சேர்த்து அணைத்த
உடன் பிறப்புக்கு ஒர் நன்றி

பெட்டிப் பாம்பாய் அல்லாமல்
குட்டி குட்டி என்னைக்
கெட்டித்தனமாய் வாழ கற்றுக் கொடுத்த
சமுதாயத்திற்கு ஒர் நன்றி

பசிவந்த போதெல்லாம் கை ஏந்தி நிற்காமல்
உட்காந்து சாப்பிட வழி சமைத்த இறவா!!!!
உனக்கு நன்றி

தாய் இன்றித் தந்தை இன்றி
சொந்தங்கள் முகம் அறியா
சின்னஞ் சிறுசுகளை
அணைத்து ஆதரிக்கும்
அன்னையர் இல்லங்களுக்கு நன்றி!

கருணை இல்லங்களுக்கு
மனித நேயத்துடன் வாரி வழங்கும்
ஈர நெஞ்சங்களுக்கு என் தலை சாய்த்து நன்றி

தனியாக நின்றாலும் தன் மானத்தோடு
எதிர் நீச்சல் போட
உயிர் கொடுத்து நல்ல
பயிர் வழத்த
விண்ணைத் தாண்டி நிற்கும் என்
அன்னைக்கு செய்வேன் நான்
ஈரெழு ஜென்மத்துக்கும்
நன்றிக் கடன்!!!