Category Archives: தனிமையின் வலி

தனிமையின் வலியே !!!

Standard

கொடியது கொடியது 
வலியது கொடியது
தனிமையின் வலியது 

மானிடவாழ்வில் 
கொடியதிலும் கொடியதுவே

தாயவள் நேசமும் கருணையும் 
தனிமையில் இல்லையே
இன்பமும் துன்பமும் 
அணுகிடும் வேளையில்
அதைபகிர்ந்திட
என்னை வாழ்திட
ஆறுதல்கூறிட 
அவள் அருகில் இல்லையே.

தினம்தினம் அவள் 
நினைவுகள் தொல்லையே
தலைவலி வந்தாலும் 
பனடோல் மாத்திரை தஞ்சமே

அன்னையவள் அருகில்இருந்தென் 
தலைதனைதடவிட
தலைவலிமாறுமே என் 
நெஞ்சமது மகிழ்வில் மூழ்குமே

அக்காவின் அரவணைப்பும் 
தங்கையின்புன்சிரிப்பும்
ஒன்றாய் இருக்கையில் கொண்டாட்டமே
இன்று தனிமையில் இருக்கையில் 
அவர்கள் பிரிவால்
என் மனம் வலியால் துடிக்குதே
சொந்தம் பந்தம் என்று 
புடைசூழ வந்திடுவர்
பணம்ஒன்றுஇல்லை என்றால் 
எட்டிக்கூட பார்க்க மாட்டார்

அன்றாடதேவையோடு
உடல் உழைத்துகளைத்தாலும்
சோகங்கள் பலசுமந்து 
தனிமையின்வலியோடு
பலகாலம் வாழ்ந்துவிட்டேன்
என் தாயின் கரம்கொண்டு சோறூண்டு 
அக்கா,தங்கையோடு,அவர்மழலையும்
என் தோள் சுமந்து ஒன்றாய் 
உறவாடும்அன்நாளில்
என்தனிமைஎன்னும் 
கொடுமையின் வலி நீங்குமே.

யாழவன்~~ராஜன் (கட்டார்)
Advertisements

தனிமையின் வலி!!

Standard

கூட்டுக் குடும்பமதில் 
குதூகலங்கள் நிறைந்திருக்கும்!!
குடும்பமாக சென்றபின்பும்
இன்பங்கள் நிறைந்திருக்கும்!
தனிநபர் வாழ்வு என்றால் 
சங்கடங்கள் தான் இருக்கும்!
கனி படர்ந்த மரம்போல.
பல காகங்கள் தொடர்ந்து வரும்!
வந்துவிட்ட காகங்களும் 
உண்டுவிட்டுச் சென்று விடும்!
உலகத்துக் கதைகள் எல்லாம்
ஊர் வலமாய் வந்துவிடும்!

வேலையால் வரும்போது  
வெறிச்சோடி கிடக்கும் வீடு!
வேடிக்கையாய் இருகும் அப்போ. 
நம் வீடு என்று சொல்ல!
பசியால் நாம் துடித்து
பால் குடிக்க போகையிலே!
பால் கரைந்து போனதென்று
பால் பெட்டி தான் சொல்லும்!
சட்டி. பானை எடுத்து வந்து
சமையல் செய்யப் போகையிலே!
துள்ளி வந்த பசிஎல்லாம்
தூரத்தில் போய்விடுமே!

வானொலிப் பெட்டியினை 
வலதுகையால் போடுகையில்!
வந்துநிற்கும் பழையபாடல்
நாம் நொந்து இருக்கையிலே!
தூங்கும் நேரம் பார்பதில்லை
தூர நோக்கும் நமக்கு இல்லை!
தாங்கும் சோபாவில் நாம் இருந்து
எழுந்து எழுந்து தூங்கிடுவோம்!
உடலையும் வருத்திடுவோம்
உணர்வையும்  வருத்திடுவோம்!
தனிமையின் வலியது 
விசத்திலும் கொடியது!!!

தாரத்தில் பற்றுவைத்து
வாரத்தில் ஒரு தடவை!
செல்போன் கதைத்து விட்டால்
சொல்லாலே கொன்றிடுவாள்!
மூத்ததுக்கு முதுகுவலி
இளையதற்கு இடுப்புவலி!
மாமியார் வீட்டினிலே
மாடுகன்று போட்டிருக்கு!
சாமியாரை பார்க்க
தங்கச்சி போயிருக்கு!
காசு இருந்தால் அனுப்பிடுங்கோ
கடினமென்றால் விட்டுடுங்கோ!
காதினிலே கேக்கையிலே 
தூக்கமது தொலைந்திடுமே!
தனிமையில் வாழ்கின்றோம்
வலிகள் பல சுமக்கின்றோம்!
இனிமை இது என்று 
இன்பமாய் வாழ்கின்றோம்!!

வேலணையூர்  லிங்கா

வாடுகின்றேன் தனிமையில்!!!!

Standard


கடந்து வந்த பாதையில்
கிடந்த எந்தன் வேதனையில்
 
பகிர்ந்து கொள்ள நீயென
கைபிடித்தேன் நான் உன்னை
 
நான் தந்தை முகம் பார்த்ததில்லை!
தாய் மடியும் அறிந்ததில்லை!
 
ஒரு பொழுது மலராக இருந்த என்னை
சில நொடியில் உன் மலராக பறித்துக்கொண்டாய்!
 
மதியில் வந்தவன் நீயடா 
என்வழி மறித்தாள் விதியடா
 
எனைக் கூட்டிச் செல்ல மனம் இருந்தும் 
கை காட்டிச் சென்றாய் அத்தை பேச்சுக் கேட்டு
 
வெகுதூரம் நீ சென்று நின்றாலும் 
என் விழிமட்டும் தனியாக நின்றாலும்
 
தாங்காது துடிக்குது தனிமையில் என் மனம்
ஏங்கியே தவிக்குது உனை எண்ணித் தினம் தினம்
 
ஏனோ துடிக்கின்றேன் நான்
அதன் இனம் தெரியாமல் தவிக்கின்றேன்
 
ஒரு நாள் உணர்ந்திடுவாய்........
இந்தப் பேதை உள்ளம்
அன்னாளில் உன் கண்ணில்
நிறைய்ந்து நிற்கும் கண்ணீர் வெள்ளம்!!!!!! - அருளினி

என்று தீரும் தனிமையின் வலி…?

Standard


பெற்றோரின் அரவணைப்பில் பிறந்து
உடன் பிறந்த சகோதரருடன் வளர்ந்து
நண்பர்களுடன் சுற்றித் திரிந்து
சிறகடித்து பறந்த காலம் அது 

திருமண பந்தத்தில் இணைந்து
பெற்றோர் ,உடன் பிறப்பை பிரிந்து
நண்பர் கூட்டத்தை மறந்து
கடல் கடந்து வெகு 
தொலைவில் வந்து
கணவனின் கைகோர்த்த காலம் இது 

என் கணவர் வேலைக்கு சென்றுவிட
தனிமையானேன் நான்கு சுவர்களுக்குள்ளே
ஆயிரம் கேள்விகள் என்னுள்ளே
தனிமையிலே வாடிப்போனேன் 

புரியாத மொழிகள்
தெரியாத முகங்கள்
பழகாத இடங்கள்
அத்தனையும் புதுமையாக 

நாள் முழுதும் வீட்டினுள்ளே
பார்க்கின்றேன் தொலைகாட்சி
கேட்கின்றேன் வானொலி
எழுதுகிறேன் கவிதைகள்
ஆனாலும் நேரம் தான் போகவில்லை
என் கணவர் வரும் நேரமும் வரவில்லை 

காத்திருந்து கண்களும் வலிக்கிறது
என் நிலைமை சொல்ல யாருமில்லை
தனிமையின் வலி என்னை கொள்கிறது
தினம் தினம் வாட்டி வதைக்கிறது - இறைவா
என்று தீரும் என் தனிமையின் வலி .....

ராதிகா றேமன்
லெபனான் .