Category Archives: செல்வம்

கல்விச்செல்வம்..! – லக்கி நெதர்லாந்து

Standard

வாழ்கின்ற நாட்கள் வரையில்
வழித்துணை என்று எண்ணி
குவித்திடும் செல்வம்
ஓர்நாள் கள்வனால் கவரப்படலாம்

மங்கை தான் மகிழ்ந்து அணியும்
தங்கமும் வைரமும் ஓர்நாள்
நங்கையின் உடலை விட்டு 
நீங்கி போகக் கூடும்

நாளுடன் கோளும் பார்த்து
ஆழமாய் அடிக்கல் நாட்டி
கட்டிய மனையும் கூட
பெருமழை பெய்யும் நாளில்
பெருகிடும் வெள்ளம் தனில்
பேயென இழுத்துப் போகுமாம்

வெள்ளத்தால் அழியாத
நெருப்பால் வேகாத
திருடர்களால் களவாட முடியாத
மலையென பெற்ற செல்வம்
அலையென கரைந்த போதும்
நல்வழி காட்டும் கல்விச்செல்வம் 
எண்ணுடன் எழுத்தும் வாழ்வின் கண்களாய்
வண்ணம் கூட்டும் இன்னலைத் தீர்க்கும்
கல்விச்செல்வம்..!
Advertisements

செல்வம்!!! – ராஜன் கட்டார்

Standard

செல்வம் செல்வம்
செல்வோம் செல்வோம் என்று சொல்லி
நிற்க்கும் செல்வம்

அதை தேடிவிட்டால்
மனதில் பெரும் இன்பம்
அது எம்மைவிட்டு
சென்று விட்டால்
பெரும் துன்பம்

தேடல்கள் அதிகம்
தேம்மி தேம்மி அழுதிடும்
தினம் தினம் எம் உள்ளம்

நிரந்தரம் இல்லை
என்று அறிந்தாலும்
எம் நிம்மதியை தொலைத்து
நிற்க்கும் செல்வம்

அளவுக்கதிகமான போதும்
ஆசைகள் அடங்காது
மனிதனின் தேவைகள் முடியாது
தேடல் தேடல் என்று சொல்லி
செல்வத்தை சேர்த்திடுவோம்

உழைத்து உழைத்து
உடல் இளைத்து போனாலும்
பணம் என்னும் மோகத்தால்
பந்தங்களை மறப்போம்
சொந்தங்களை சுமையாய்
நினைப்போம்.
பாடையிலே போகையிலும்
வராத பணத்துக்காய்
வாழ்க்கையை தொலைத்தோம்

செல்வங்கள் பலதிருக்கு
அதுக்கு சிறப்புகள்
சிகரமாய் இருக்கு
பந்தம் பிடிக்ககூட
காசிருந்தால் தான்
சொந்தம் வரும் என்ற
பேச்சு மெய்யாச்சு
இனி என்ன தான்
சொல்லி பயனோ
பணம் பெரும் செல்வமே
அதற்க்காய் எம்  வாழ்வை
தொலைப்பது தகுமா?
இதுதான் உலக வாழ்வின் நியமே...

செல்வம்!!! – வேலணையூர் லிங்கா!

Standard

கோட்டையை தகர்த்து
கொடி நாட்டக்கூடிய தந்திரம்!
கோழையை கோபுரத்தில் ஏற்றி
மாலை சூடவைக்கும் மந்திரம்!

உலகத்தை ஏய்போரும்
ஊழல் புரிவோரும் 
உறங்குமிடம் இதன் வீடு!
உழைப்பின்றி இருப்போருக்கும்
உணவின்றி அழுவோருக்கும் 
இதுதான் சுடுகாடு!

சமுதாய சந்தையிலும்
சம்மந்தியர் வீட்டினிலும் 
நுழைந்துவிடும் புயல்!
சாமியார் மடத்திலும்
தலைவர்கள்  நடத்தையையும் 
தடுமாற  வைக்கும் இதன் செயல்!

அறிந்துகொண்ட இதயங்களை
அறுத்தப்போடத் துடிக்கும் 
இரக்கமில்லா நெருப்பு!
அலை அலையாய் வந்துவிட்டு
சுளை சுளையாய் சென்றுவிடும் அதன் சிறப்பு!

ஊர்விட்டு ஊர் வந்தோம்
உழைத்துவிட்டு உன்னை அள்ளிக்கொள்ள!
உடல் வழுவற்று உழைக்கின்றோம்
உன்னைக் கானவில்ல!

சீட்டுக்கு போட்டுவிட்டு 
வீட்டுக்குள் பூட்டி வைப்போம்!
வட்டிக்கு கொடுத்துவிட்டு 
குட்டிபோட  வைத்திடுவோம்!

தேடிவைத்த செல்வங்கள் 
சேர்ந்து இருப்பதில்லை!
ஓடிநாம் வந்தாலும் 
கூடி அது வருவதில்லை!

உண்மையான உள்ளமது
நல்லதொரு செல்வமாகும்!
கல்வி நிறைந்த செல்வமானால்
காலமெல்லாம் கூடிவரும்!!!!

நான் பெற்ற நிறைவான செல்வம் – அருளினி லண்டன்

Standard

திரும்பித் திரும்பி பார்த்தாலே
இனிக்கும் அந்த வாழ்க்கை
விரும்பி விரும்பி கேட்டாலும்
கிடைக்காது அந்த வாழ்க்கை

காலை என்ன மாலை என்ன
கவலையின்றி கழித்த காலம் அது
தலைவாரிப் பூச்சூடி தோழிகளுடன்
எள்ளி நகையாடிய காலம் அது

பூங்கா வென்றும் பூங்காவனம் என்றும்
சுற்றித்திரிந்த காலம் அது
நீங்கா நினைவுகளைச் சுமந்து
நிற்கும் காலம் அது

மாலையிட்டு எனை ஏற்று
துணை என்று கூட்டிவந்தார் என் அத்தான்
பொத்தான் தைக்கவும் நேரமின்றிப்
பறக்கிறோம் நாம் இங்கே!

ஒடினாலும் காசை தின்னும்
ஒரு இடத்தில் நின்றாலும் காசைத்தின்னும்
கால் நடைப் போக என்ன
ஊருக்குள்ளயா நம்ம வேலை?

மொட்டாக்கும் போட்டுக்கிட்டு
மூன்று மைல் நடக்கையிலே!
மூட்டு மூட்டாய் வலிக்கும்
அங்கே மூடுபனிக் கொடுமையாலே!

வேலை விட்டு வீடு வந்து
வாசலுக்குள் நுழையுமுன்னே
ஒடிவந்து கட்டி அணைத்து
தூக்கச் சொல்லி வாரிப் பிடித்து
முத்தமிடும் மைந்தன் அவன்

ஈடு கொடுக்க முடியாத....
என் வாழ் நாளில்
நான் பெற்ற நிறைவான செல்வம் அவன்!!!