Category Archives: சுமைதாங்கி

சுமைதாங்கி [வேலணையூர் லிங்கா]

Standard


ஓலைக்குடிசை அது 
சேலைக்கும் வழியில்லை
மணமாலையும் அவளுக்கு இல்லை!

பூ எடுத்து மாலைகட்டி.
மலர் மூன்றை வளர்த்து வந்தால்!
சந்தோசம் அவளுக்கில்லை
சங்கடமும் அவளுககில்லை!
மற்றவர்கள் மனதைப்போல் 
தன் மலர்களை படிக்கவைத்தால்!
பெற்றவன் இருந்திருந்தால்
கற்றகல்வி தொடர்ந்திருக்கும்.
இறுதிவரை படித்திருந்தால் 
இஞ்சினியர் ஆகியிருப்போம்!
இளையமலர் முனைகியதை 
இன்பத்தாய் கேட்டிருந்தால்
பத்துப்பாத்திரம் துடைத்தேனும்
படிக்கவைப்பேன் உன்னைஎன்று!
கோபத்தை அடக்கிவிட்டு
கொதித்தேழுந்தாள் அன்னைஅவள்!

பூ எடுத்து மாலை கட்டினால்
சேலைக்கு நூல் தைத்தாள்!
வேலைக்கு போகாத 
வெறுநாட்கள் கண்டதில்லை!
பலகாரம் பலசெய்து
பணவருவாய் பெற்றிருந்தாள்!

இளையமலரும் 
இஞ்சினியர் ஆகிவிட்டாள்:.
மற்றமலர்களுக்கு 
மணமுடித்து மகிழ்வித்தாள்!
காலங்கள் கடந்து செல்ல
துக்கம் அவளை துரத்தியது!! 
சுமைகள் அவளை வருத்தியது!

இஞ்சினியர் என்றவளோ 
இதயமதை கல்லாக்கி 
இங்லாந்து போய்விட்டால்!
மாலையிட்ட மலர் இரண்டும்
வேலைக்கு போகையிலே.
காத்திருந்த கன்னிவெடியில்
கால்கள் இரண்டும் முட்டிடவே.
கண்பார்வையை காவிக்கொண்டு
காலன் அவன் சென்றானே!
கண் இழந்த மலர்இரண்டை
கண்ணியமாய் சுமக்கின்றாள்!
காலங்கள் பலசென்றும்
கலங்காத தாய் அவள்!
சுமைதாங்கி நான் என்று
துணைநிற்பாள் இன்றும் அவள்!!!!!!