Category Archives: கோலங்கள்

கோலம் – [மஹந்தி – ஜேர்மனி]

Standard

Mahinthy kavithai

Advertisements

திருமணக்கோலம்..! [லக்கி – நெதர்லாந்து]

Standard


அதிகாலை பொழுதினில்
ஆதவன் ஒளியால்
நுனிப் புல் போடும் 
பனித்துளி கோலம்

ஓசையின்றி
மெல்லத் திறக்கும்
மொட்டுகளின் பூக்கோலம்

நிலவின் ஒளியில்
உன் நினைவின் துணையில் 
இரவின் நிலாக்கோலம்...

மாலைச்சூரியன் நிலவைப்
பரிசளித்துச் சென்றுவிட
ஆனந்தமாய் விண்மீன்கள் 
போட்டன நட்சத்திர கோலம்

ஆழ்ந்த உறக்கத்தில் கூட
வண்ண வண்ண கனவுகளால் நீ
என் மனதில் ஆழமாய் போட்டாய்
திருமணக்கோலம்..!

காதல் கோலம்!!! [தயா லெபனான்]

Standard


தினமும் எனக்காக காத்திருப்பாள்
புன்னகையோடு பூத்திருப்பாள்.

நான் பக்கம் வந்ததும்
செல்ல கோபம் கொண்டு
முறைத்துப் பார்ப்பாள்!!!

என்னுடைய வேதனை உனக்கு புரியவில்லையா?
என்று வார்த்தையால் சீண்டிடுவாள்.
மறு நொடி எனைக் கண்டதும்,
வெட்கத்தில்...
அவள் கால்கள் வரையும்
அழகான கோலங்கள்.
புள்ளியிலா கோலங்கள்...
வீழ்ந்து போவேன்...
அவள் வரையும் கோலத்திலே!!!
மீண்டும் தொடரும் 
எங்கள் அன்பு...
அழகான காதல் கோலத்தோடு!!!

அழியாத கோலங்கள்!!! – [அருளினி – பிரித்தானியா]

Standard

 
காலையில் ஓர் பூட்டு
மாலையில் ஓர் சாவி
மூலையில் ஓர் கட்டில்
வேலையில் ஒர் கண்ணியம்
 
இது தானா உன் சீவியம்!
 
அம்மா நீ ஒரு காவியம்
தினம் இருமுறை நான் காணும் 
நடமாடும் ஒவியம்
 
பூட்டி இருக்கும் உன் மனக் கதவின்
சாவிதனைத் தேடுகின்றேன்

சாத்துகிறாய் உன் மனக்கதவை
அறிவேன் நான் உன் மனச்சிதைவை

நீ நிலம் பாத்து நடந்துவரும் தங்கசிலை
ஏனம்மா உனக்கிந்த் வெள்ளைச் சேலை
உடுத்திப் பார்க்கத் துடிகின்றேன் பட்டுச்சேலை

உன் வீட்டு முற்றம் போல்
வெறுமையாய் கிடக்கும் உன் மனசுக்குள்
கோலம் போடத் துடிக்குது என் மனசு
 
உனை எண்ணி என் மனசில் 
நான் போட்ட கோலங்கள்
மழை வந்தாலும்                     
அழியாத கோலங்கள்!!!

அவள் போட்டகோலங்கள்!!! – லிங்கா – ஜேர்மனி

Standard


காலையில் கதிரவன் .கண்விழிக்கும் நேரம்!
காற்றலையில் வானொலிகள். இசைப் பூசைபோடும் நேரம்!
கல்லூரி விடுதி என்ற சிறையில். எண்ணை விளக்கணைந்த அறையில்!
வெளிச்சம் வரும் திசையில். விழித்தன கண்கள் உன் காலடியின் அசைவில்!

உன் வீட்டு முத்தத்தை சத்தமின்றி சுத்தம் செய்தாய்!
மஞ்சள் கலந்த தண்ணீர்கொண்டு. மண் அதை மகிழவைத்தாய்!
அள்ளி மனம் கொள்ளையிடும். அழகுநிலவாய் வந்துநின்றாய்!
துள்ளி வந்து புள்ளிவைத்து. கோலமதை போட்டுநின்றாய்!
உன் கோலத்தை நான் பார்த்து. கொஞ்ச நேரம்  மறந்து நின்றேன்!
உன் கோலத்தில் நான் மயங்கி. ஆசைக் கோபுரத்தில் ஏறிவிட்டேன்!

புள்ளி வைத்தகோலமது அள்ளிவைத்தது காதல் தீயை!
அன்று நீ புரியவில்லை. காதலில் வேகுகின்றேன் நான் என்று!
அல்லியில் பூர்த்த மலர்போல. உன் புள்ளியில் பூர்த்த கோலமது..
இதயத்தில் குடிபுகுந்து. காதல் மணம் வீசுதடி!!

நீ போட்ட கோலமதை நிஐமாக பார்க்கையிலே!
பாகக்காய் இனிக்குதடி. பால்ப் புக்கை கசக்குதடி!
அருகில் போய் பார்த்தவுடன். அர்த்தம் தான் புரிந்ததடி!
அத்தைமகன் நான் இன்று. முத்தம் தர வேண்டும் என்று!!!!!!!