Category Archives: கைபேசி காதல்

கைபேசி காதல்…! – லக்கி

Standard

நீ கை பேசி அழைப்பை துண்டித்த மறு 
நொடியில் மீண்டும் அழைப்பு வருமோ..
என காத்திருக்க தொடங்கிவிடுகிறது மனது..
வெகுநேரம் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
நீ அழையாத என் கைபேசியை...

எடுத்தெடுத்துப் பார்க்கிறேன் நீ அனுப்பிய
பழைய குறுஞ்செய்திகளை
வினாடிகளையும் தோற்கடிக்கும் நம் 
அடுத்தடுத்த பதில் பரிமாற்றங்கள்.., 
நீ அனுப்பும் குறுஞ்செய்திகளோடு
சேர்த்தே அனுப்புகிறாய் உன் பிரியங்களையும்..

சில நேர கைபேசி சண்டைகளில்
ஒருவருக்கொருவர் செல்லமாய் கோபித்து
சிரிக்காமல் சீண்டுவோம்.., சிணுங்கியபின் சிக்கிடுவோம்
சமாதானம் எனும் சிறையில்..
அதன் சமாதான வார்த்தைகளில்
தெரிக்கத் துவங்கிவிடுகிறது உனதன்பு...

நீ அழைத்து பேசிய நிமிடங்களையும்
நான் அழைக்காமல் விடுத்த நிமிடங்களையும்
பதிவு செய்தே வைத்திருக்கிறது என் கைபேசி...

காத்திருத்தல்.., காக்க வைத்தல் 
இரண்டும் சுகமானதல்லவா காதலில்..!?

இப்போதெல்லாம் நீ அழைத்து பேசும் 
நிமிடங்களுக்காய் காத்திருக்கத் துவங்கி விட்டோம்
நானும் எனது கை பேசியும்...

கைபேசிக் காதாலாலே!!! [அருளினி – பிரித்தானியா]

Standard


படித்தான் சுந்தர் மொட்டை மாடியில் பேப்பர்
கிழித்து விடுத்தான் ரொக்கட்டில் பேப்பர்

யன்னலூடே வந்து விழுந்தது...... சூப்பர்
எட்டிப் பார்த்தேன் முற்றத்தில் அப்பர்

படித்துப் பார்த்தேன் ரொக்கட்டில் கவிதை

கணக்கு பாடம் மாலையில் இருக்கு!
சுணங்காமல் வந்திடு....
பஸ் ஸடாண்டு வரைக்கு....... 

வீட்டில் கன வேலை எனக்கு இருக்கு!
ரோட்டுக்கு வர முடியாது எனக்கு!

முற்றத்தில் நின்ற அப்பர்
திரும்பிப் பார்த்தார் அவனை!!!!

சீற்றத்தில் சொன்னார். யார் நீ மவனே!!!

பாசமான என் அப்பரிடம்
வசமாக மாட்டிக் கொண்டோம்
நம் கைபேசிக் காதலாலே!!!