Category Archives: குளிர்காலம்

குளிர்காலம்!!! – வேலணையூர் லிங்கா!

Standard

மருமகளை அதிர வைக்கும் 
மாமியார் போலவும்..
மனிதர்களை மயங்கவைக்கும்
சாமியார் போலவும்
எனி வரும் எதிர்காலம்
நம்மை நடுங்கவைக்கும் குளிர்காலம்
கழுத்தை சுற்றி பந்தம் கட்டி 
கொழுத்த துணியில் உடை அணிந்து
சிரிப்புக்காட்டும் பொம்மைகள் போல்
சுத்த வைக்கும் குளிர்காலம்!

வெண்பனிகள் இறங்கி வந்து
புல் வெளியில் பாய்விரிக்க!
நம் கண்மணிகளுக்கு விருந்தாக
பாலாடை போல் இருக்கும்!
பச்சை நிற மரங்கள் எல்லாம்
வெண் முத்துக்களாய் பூத்திருக்கும்!
பள்ளி செல்லும் பிள்ளைகளும்
அதை பல வடிவில் மாற்றிடுவர்!

சூரியனின் கதிர்கள் எல்லாம்
வாழ்வு இழந்து போய்யிருக்கும்!
மூடிய போர்வைக்குள்
முகத்தைப்  புதைத்து ஒழிந்திருக்கும்!
அழகு நிலா வருகையும்
அடுத்து அடுத்து குறைந்துவிடும்!
இருட்டுத் தேவதையின்
இன்ப வருகைதான்
அடுத்தடுத்து தொடர்ந்து வரும்!!

வெந்ததும் வேகாததும்
பொரித்ததும் பொரியாததும்!
கண்டபடி சுவைத்திடுவர்
தெருக்கடையில் நின்றும் ருசிபார்பர்!!
மதுபோதையில் இருப்போரும்
மாற்று மருந்து குடிப்போரும்!!
குளிர்காலம் வந்துவிட்டால்
கொண்டாட்டம் இவர்களுக்கே..!
உடல் மூடி உடைஅணிந்து
ஊர் சுற்றி வருவதனால்!!!!
அம்மனிகள் போடுகின்ற 
அனைத்து  நகைகளையும்..
அர்த்தமற்றதாக்கிவிடும்
குற்றமற்ற குளிர்காலம்!!!!
Advertisements

குளிர்காலம் – லக்கி (நெதர்லாந்து)

Standard

உலகம் சுற்றும் வேகத்தில்
இருள் நீளமாய் கழிந்து செல்வதும்
காலை மெல்லப் புலர்வதுவும்
காலச் சக்கரத்தின் சுழற்சியில்
சரியாக நகர்கின்றது

மெல்லத் தணியும் வெயிலுக்கும்
வியர்வை மழைக்கும், 
தகிக்கும் வெப்பத்திற்கும் 
விடை கொடுத்து  
ஆரம்பித்துவிட்டது குளிர்காலம்

விடியற்காலையிலே வீதியெலாம்  
பனிப் புகை மூட ஆரம்பித்துவிட்டது
வாயிலேயும் ஆவி வரவழைக்கும்
அதிகாலை குளிர்!

பூச்சியத்திற்கும் கீழே 
இருக்கும் கால நிலையில்
சில்லென்று வீசும் காற்றோடு கலந்து
நடுங்க வைக்கும் குளிர்

பனியில் உறைந்து
மழையில் குளிர்ந்து
பல்லெல்லாம் கிடுகிடுக்க
மூக்கும் காதுகளும் கன்னங்களும் 
சிவந்து விறைக்க 
விரட்டவந்த கதிரவனையும்
மிரட்டிப் பார்க்கும் குளிர்

குத்தும் குளிருக்குள்
நாளை என்பது 
நிச்சயமில்லாத நாட்டில் 
வலி சுமக்கும் இந்த 
வாழ்க்கைப் பயணத்தின் போது 
விறைத்துப் போன 
உடலைச் சுமந்தவாறே
வாழ்வு வெறுப்பாக
நெஞ்சமும் இங்கு புலம்பித் தவிக்க
மனம் முகவரியைத் தேடுகிறது..

குளிர்காலம்! – தயா பிரதீப்

Standard


சிலு சிலு வென்று மெல்லிய காற்றும்
இதமாய் வீசிகொண்டிருந்தது 

அடைமழையும் ஓயாது பெய்து
கொண்டிருந்தது
அடிக்கடி பசியும் எடுத்தது

குளிர் காலமும் தொடங்கிடவே
நித்திரைதான் சொர்க்கமாய் தெரிந்தது 

அதிகாலை ஆறு மணி அடித்தாலும்
அந்தி மாலைப் பொழுதாகவே தெரிந்தது

குடும்பத்தின் கடமைகளை நினைத்து
மனமே இல்லாமல் கண் விழித்தேன்
இனி எப்போது முடியும் இந்த
குளிர் காலம் என்ற வெறுப்போடு...

குளிர்காலம்!!! – அருளினி சிவனேசன் (லண்டன்)

Standard

காலமது காலம்
கிடுகிடுக்க வைக்கும் காலம்
நம் கோலத்தையே தன் 
ஆதிக்கத்தால் மாற்றிவிடும் காலம்
 
மொட்டாக்கும் போட்டுக் கொண்டு 
மூடுபனியில் போகையிலே
மூச்சுக்கூட சுருள் சுருளாய் 
புகை தள்ளும் காலம்
 
சூரியனும் நம்மைவிட்டு 
ஓடி ஒழிக்கும் காலம்
வருவாயா மாட்டாயா என 
நாம் கேட்டு நிற்கும் காலம்
 
மரங்களும் தம் ஆடை இழந்து
நாணி கோணி நிற்க்கையிலே
மூடுபனி பொழிந்து அதை 
மூடி வைக்கும் காலம் 
 
அரை இறாத்தல் பாண் வாங்க
அரைக்கிலோ ஆடை அணிந்து
போக வைக்கும் காலம் அது

அரை குறையாய் அணிந்து கொண்டால் 
பாதி வழி போகையிலே
பறையாமல் திரும்பிவிடு
என பல்லு எல்லாம் கிடுகிடுக்கும் காலம்
 
வீடு வந்து சேர்ந்தவுடன் கேத்தில் எங்கே
போத்தில் எங்கே எனத் தேடி ஒடும் காலம்

காலையிலும் மப்பு
அந்தி மாலையிலும் மப்பு 
குளிர் காலம் அது போகும் வரை 
ஒரே மப்புத்தான்!!!