Category Archives: காந்தக் கண்கள்

காந்தக் கண்கள் [வேலணையூர் லிங்கா]

Standard


நம் வழி மீது விழி வைப்பாள்
காந்த விழிமீது விசம் வைப்பாள் !!
உன்னை விரும்பியதாய்
உரை எழுதுவாள். பின்...
உன் உரைக்கே திரைபோடுவாள்!!!!
சிரித்திடுவாள். சினிங்கிடுவாள். 
சில்லறை இல்லை என்றால்???
கல்லறைக்கு போ என்பாள்!!

அமைதியாக நடித்திடுவாள்
உன்னை அடிமையாக்க துடித்திடுவாள்!!
ஆசை மொழி பேசிடுவாள்
அருகில் நம்மை அழைத்திடுவாள்!!
உருகி நாம் வந்துவிட்டால்
கொதி உலையில் போட்டு மூடிடுவாள்!!
என்னுயிர் நீ என்பாள்
உன்உயிர் நான் என்பாள்.
பனிபோல் படர்ந்து வந்து
பாசக்கயிறு வீசிடுவாள்!!

தன் நடிப்பால் 
இத்தரணியில் பெயர் எடுப்பாள்!
உன்னை பிடிப்பாள். 
பின் உன் கதையை அவள் முடிப்பாள்!!
பகலாய் இருந்த எம்மை
இரவாய் ஆக்கிடுவாள்.
உன் மதியை மயக்கிவிட்டு
மதியாமல் போய் விடுவாள்!!

செல்போன் எடுப்பாள்
போன் அதனில் காதல் போர்தொடுப்பாள்!
நம் காதுகளில் சொல் இறக்கி
இதய அறையை உடைத்திடுவாள்!!
கணனி மீதும் குடிவருவாள்
காயப்படுத்தி சென்றிடுவாள்!
ஆண்களே !!!  .
காந்தக் கண்களை 
காதலிக்க எண்ணாதீர்கள்???
கவலைகலை தான் சுமந்து
கல்லறைக்குள் போகாதீர்கள்???
Advertisements