Category Archives: கண்ணாடி

கண்ணாடி [லிங்கா – ஜேர்மனி]

Standard


கண்ணாடி முன் நின்று
என் முகம் பாக்கின்றேன்
உன்முகம் தெரியுதங்கே  .
உண்மை என்று நான் இருந்தேன்!

நீ கொடுத்த பூங்கொத்தை
கண்ணாடி முன்வைத்தேன்.
கலர் கலராய் தெரியுதங்கே.
காதல் என்று நான் இருந்தேன்!
நீ நடந்த பாதையிலே
நிறைந்திருந்த முள்ளதனை.
கண்டு நான் எடுத்து வந்து
கண்ணாடி முன் வைத்தேன்.
ஒளிவீசும் பாதமது
உன் பாதம் என்றிருந்தேன்!

கண்ணாடி வளையல் ஒன்று
காசு கொடுத்து வங்கிவந்தேன்.
பின்னாடி அம்மா என்று
கண்ணாலே சொன்னாயே!
வாங்கி வந்தவளையல்களை
கண்ணாடி முன்வைத்தேன்.
சிலைவடிவில் நீ என்றும்
சிரிப்பதை கண்டுகொண்டேன்!

கண்ணாடி முன் இருக்கும்
கலைப்பொருட்கள் அத்தனையும்.
கண்விழிக்கும் நேரமெல்லாம்
உன் நினைப்பை மீட்டுதடி!
கண்ணாலே வலைவிரித்தாய்
காதலன் நான் என்றாய்!
முன்நாளில் எழுதிய
உன் காதல் கடிதம் ஒன்றை.
கண்ணாடி முன் வைத்தேன்டி
வரிகள் எல்லாம் தலைகீழாய் தெரியுதங்கே
நிலைகுலையும் காதல் என்று
கண்ணாடி இன்று நினைவூட்டீச் சொன்னதடி...!
Advertisements