Category Archives: உன் நினைவுகள்

வற்றாத நதியாய் உன் நினைவுகள்!!! தயா லெபனான்

Standard


சுமையாய் இருந்த வேளை 
சுகமாகவே வந்தவன் 
நீ...என் மனசுக்குள்!! 
கனவினில் நான் கண்டு 
கண் விளிக்கும் நேரங்கள் 
அதிகாலை பொழுதாக விடிவது 
உன் நினைவுகளோடு!!!!!!! 

மலரும் பூக்கள் ஒவ்வொன்றிலும் 
உந்தன் பூமுகமே நினைவுகளாய்  
மணக்கும் வாசனை ஒவ்வொன்றிலும் 
தமிழ் மண் வாசனையாய்... 
உன் நினைவுகளே எனக்கு.

நான் கேட்கும் இசை ஒவ்வொன்றிலும் 
பாடலின் வரிகளாய்
உன் நினைவுகளே எனக்கு 
நான் கிறுக்கலாய் கிறுக்கும் 
கவியில் கூட... 
உந்தன் நினைவுகளே... 

உரிமை சொல்ல உறவுகள் 
ஆயிரம் இருந்தாலும்!!! 
என் உள்ளத்தை புரிந்து கொள்ள.. 
நீ மட்டும் போதுமே எனக்கு. 

சுமையாக இருந்தாலும்.. 
சுகமாகவே சுமப்பேன்... 
என்றென்றும் என் மனதில்... 
வற்றாத நதியாய் ... 
உன் நினைவுகளை மட்டுமே!!!

உன் நினைவுகள்..! லக்கி

Standard


சுட்டெரிக்கும் 
சூரிய ஒளியிலும் 
நிலவின் குளிர்ச்சியாய் 
உன் நினைவுகள்..! 

வரண்டு கிடக்கும் 
பாலைவனத்திலும் 
நத்தவனத்தின் பசுமையாய்  
உன் நினைவுகள்..!

கடுங்குளிர் 
காலை பயணத்திலும் 
சில்லென்ற 
உன் நினைவுகள்..!

தொலைபேசி 
சிணுங்கல்களிலும் 
என் கைபேசியில் 
உன் குருஞ்செய்தியின் மணியாய்
உன் நினைவுகள்..! 

சாலையோர ப
யணத்திலும் 
பேருந்தின் இரைச்சல் 
சத்ததிற்க்கும் இடையில் 
பேரமைதியாய் உன் நினைவுகள்..! 

பெரும்  காற்று 
வீசும்போதும் 
தென்றலின் தொடுதலாய் 
உன் நினைவுகள்..!

உயிர் உள்ள வரை 
என் இதயம் 
உன் நினைவுகளை சுமக்கும்
உயிரின்றி போனால் 
என் கல்லறை கூட 
உன் நினைவுகளை சுமக்கும்..!